தமிழ்நாடு வ .உ .சி .நல பேரவை "வரவேற்கிறோம்"

 தமிழ்நாடு வ .உ .சி .நல பேரவை


         வெள்ளாளர் சமுதாயத்தின் பண்பாடு கலாச்சாரம் மற்றும் சிந்தனை, செயலூக்கம், அறிவு, ஆற்றல், தீரம், வீரம், கொள்கைப் பற்று, போன்ற பண்முக ஆற்றல் பெற்று நமது இனத்தின் மாண்பினையும், மதிப்பையும், மீண்டும் நம் மக்கள் மத்தியில் பதிவு செய்யவும், நமக்கென உள்ள தனித் தன்மையை நிலை நிறுத்தி நமது வெள்ளாளர் மத்தியில் உடன் தொடர்பையும், ஒற்றுமையையும், வலுப்படுத்தி மீண்டும் தமிழகத்தில் மறு மலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நமது தமிழ்நாடு வ.உ.சி பேரவை அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு 2009 ம் ஆண்டு துவக்கப்பட்டது.

         துவங்கிய நாள்முதல் சமுதாயப்பற்றினையும், நமது இனத்தின் பண்புகளையும் மக்கள் மனதில் பதிய வைப்பதோடு, ஒற்றுமையையும் நமது வெள்ளாளர் இன்த்தின்பால் பரஸ்பரம் நல்ல சிந்தனையையும் நிலை நிறுத்தி செயலாற்றி வருகிறது.

         பேரவையின் வளர்ச்சிப் படிகளை கடந்த மூன்று ஆண்டுகளாக உற்று நோக்கினால் தற்போதய வளர்சிப் பாதையும் அதை நமது பேரவை லாவகமாக கடந்து வந்த முறைகளும் புலப்படும்.

சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம்

சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட வடசென்னை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவொற்றியூர் கிளை 5ம் ஆண்டு துவக்க விழா

மாணவ, மாணவிகள் ஆண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கருத்தரங்கம்

உலக மகளிர் தின விழா

நன்றி தெரிவிக்கும் கூட்டம்

 

வடசென்னை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

    சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட வடசென்னை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.

     சிறப்பு விருந்தினர்கள் - மாநில அவைத் தலைவர் திரு.M.ராஜகோபால்பிள்ளை, மாநிலத் தலைவர் - திரு.E.முருகேசன்பிள்ளை, மாநில பொதுச்செயலாளர் - Dr.K.குமார்பிள்ளை

இடம்- -> எண்.50, ஈ.வெ.ரா.பெரியார் தெரு, மணலி, சென்னை-68

நாள் --> 19.07.2015, சனிக்கிழமை

நேரம் --> மாலை 5.00 மணி


ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 144வது பிறந்தநாள் விழா

ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 144வது பிறந்தநாள் விழா 05.09.2015 அன்று சென்னையில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி K.K.நகரில் உள்ள நமது தலைமை அலுவலகத்திலிருந்து மாநிலத் தலைவர் உயர்திரு. E.முருகேசன்பிள்ளை அவர்கள் மற்றும் மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.K.குமார்பிள்ளை அவர்கள் தலைமையில் பேரணியாகச் சென்று சென்னை துறைமுக வாயிலில் உள்ள ஐயா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது.ஐயா வ.உ.சி.க்கு மதுரை ஆதினம் மாலை அணிவிக்க உள்ளார்

05.09.2015 அன்று ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 144வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை ஆதினம் லோக குரு 292ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், தமிழ்நாடு வ.உ.சி. நலப்பேரவையின் மாநிலத் தலைவர், மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர் மற்றும் பேரவை உறுப்பினர்களுடன் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று சென்னை துறைமுக வாயிலில் உள்ள ஐயாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள். மேலும் பேரவையின் வலைத்தளம் மற்றும் மொபைல் அப்பிலிகேசன் துவக்கி வைக்க உள்ளார்கள்.